News November 25, 2025
மயிலாடுதுறை அருகே பெண் கைது

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மணல்மேடு காவல் சரகத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு அருகே கொற்கை சாலை தெரு பகுதியில் விஜயகுமார் என்பவரது மனைவி சங்கீதா (39) விற்பனைக்காக 200 பாண்டி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்து, அவற்றை பறிமுதல் செய்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 27, 2025
மயிலாடுதுறை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 27, 2025
BREAKING: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நவ.29ம் தேதி மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!
News November 27, 2025
மயிலாடுதுறை: தகராறில் கொத்தனார் பலி

சீர்காழி திருத்தோணிபுரம் பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் கண்ணன்(43) அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (43) இருவரும் நேற்று இரவு ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ராஜா கண்ணனை கட்டையால் தாக்கியுள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த கண்ணன் சீர்காழி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


