News May 18, 2024

மயிலாடுதுறை அருகே எஜமான் உத்தரவு பெறும் நிகழ்வு

image

திருபுவனம் வைகாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சரபர் அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் எஜமான் உத்தரவு பெறும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

Similar News

News January 3, 2026

மயிலாடுதுறை: மின்தடை தற்காலிகமாக ஒத்திவைப்பு

image

மயிலாடுதுறை வட்டம் மணக்குடி துணை மின் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் மின்தடை செய்யப்படுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News January 3, 2026

மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது கைபேசி பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஒரு வழி பாதையில் எதிர்ப்புறமாக வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம் எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News January 3, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.02) இரவு 10 முதல் இன்று (ஜன.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!