News December 27, 2025
மயிலாடுதுறை அருகே இருவர் பரிதாப பலி!

சீர்காழியை சேர்ந்தவர் சந்தானம் (25). இவரும் மகேந்திரனும்(21) மோட்டார் சைக்கிளில் ஆக்கூரில் இருந்து கருவி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பூந்தாழை சாலையில் சென்றபோது வேளாங்கண்ணி நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் இருவரும் படு காயம் அடைந்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News December 27, 2025
மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் எஸ் எஸ் சி பொது பிரிவு காவலர் எழுத்து தேர்வு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகிற 29ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நேரில் அல்லது 9499055904 என்ற எண்ணிற்கு விபரங்களை அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: 300 ஆண்டுகள் பழமையான வாள் திருட்டு!

மயிலாடுதுறை, தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தொன்மையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இதனை சுற்றுலா வரும் மக்கள் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாள் ஒன்று காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.