News January 15, 2026
மயிலாடுதுறை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
Similar News
News January 27, 2026
மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு சிறப்பு விருது

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 9 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் கொள்ளிடம், மாங்கனம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, எடமணல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார், தன்னார்வலர் ஜெனிஷா ஆகியோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கி பாராட்டினார்.
News January 27, 2026
மயிலாடுதுறை: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 27, 2026
மயிலாடுதுறை அருகே பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகராட்சி 30-வது வார்டு எரகலித் தெருவில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு குறிப்பாக தூா்க்கணாங்குளம் பகுதிகளில் பன்றிகளின் தொல்லையால் இப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனா். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


