News April 14, 2024
மயிலாடுதுறையில் 406 பேர் கைது

மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் தற்போது வரை 400 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 406 குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளிடம் இருந்து 8437 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் 3534 பாண்டி மது பாட்டில்கள் 1084 தமிழ்நாடு மது பாட்டில்கள் மற்றும் 3 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் நேற்று(அக்.16) இரவு 11 மணி முதல், இன்று(அக்.17) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
மயிலாடுதுறை: சிலிண்டர் வேண்டுமா? ஒரு Message போதும்!

மயிலாடுதுறை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 16, 2025
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆய்வு

மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் வருகை பதிவேடுகளை பார்வையிட்டு மருந்து மாத்திரை கையிருப்பு விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.