News April 3, 2025
மயிலாடுதுறையில் வேலை வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் FIELD MANAGER பதவிக்கு 42 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள்<
Similar News
News April 4, 2025
மயிலாடுதுறை கலெக்டர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறையில் வரும் நாள்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கலெக்டர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். கூரை வீடுகளில் வசிப்பவர்கள் கோடைக்காலம் முடியும் வரை அருகில் தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும். விறகு பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
News April 4, 2025
மயிலாடுதுறைக்கு புதியஇரயில் – பயணிகள் மகிழ்ச்சி

இராமேஸ்வரம் – தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையை ஏப்ரல் 6
பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த இரயில் சேவை ராமேஸ்வரத்தில் இருந்து வரும் 6-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்.16104), ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை செல்வதால் மயிலாடுதுறை பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News April 4, 2025
மயிலாடுதுறை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்யப்படும் மார்கழி பட்ட நிலக்கடலையினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏப்ரல் 02 -ம் தேதி முதல் மறைமுக ஏலம் நடத்த திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர்.