News November 11, 2025
மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப், மயிலாடுதுறை ஆகியவை இணைந்து நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை கச்சேரி சாலையிலுள்ள யூனியன் கிளப் வளாகத்தில் எதிர்வரும் 14.11.2025 வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
மயிலாடுதுறை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<
News November 11, 2025
மயிலாடுதுறை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<
News November 11, 2025
மயிலாடுதுறை எம்.பி சுதா உறுதி

வாணகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதை அறிந்த மயிலாடுதுறை எம்.பி சுதா, இது தொடர்பாக பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும், ஒரு சில நாட்களில் வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.


