News January 2, 2026
மயிலாடுதுறையில் மின்தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூ மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (ஜன.03) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பாலையூர், பருத்திக்காடு, பெரட்டக்குடி, திருவாவடுதுறைம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என பாலையூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ரேனுகா தேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
மயிலாடுதுறை: 2025-ல் இத்தனை திருட்டா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2025) 98 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் 8 வழக்குகள் பெருங்கொள்ளை குற்ற வழக்குகள் ஆகும். இந்த திருட்டு குற்ற வழக்குகள் தொடர்பாக 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருட்டுப்போன ரூ.81 லட்சத்து 82 ஆயிரம், மொத்த சொத்து மதிப்பில் ரூ.63 லட்சத்து 85 ஆயிரத்து 750 மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
News January 3, 2026
மயிலாடுதுறை: மின்தடை தற்காலிகமாக ஒத்திவைப்பு

மயிலாடுதுறை வட்டம் மணக்குடி துணை மின் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் மின்தடை செய்யப்படுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது கைபேசி பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஒரு வழி பாதையில் எதிர்ப்புறமாக வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம் எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


