News April 24, 2024
மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் “பெண்ணே விழித்துக் கொள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்படம் இன்று திரையிடப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு குறும்படங்களை பார்வையிட்டு தங்களது சந்தேகங்களை காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். அதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.
Similar News
News August 9, 2025
241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
மயிலாடுதுறை: ரூ.1,42,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 9, 2025
மயிலாடுதுறையில் இப்படி வரலாறா?

மயிலாடுதுறை கடைவீதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு 1943 இல் கட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சின்னமாகும். இந்த மணிக்கூண்டு இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவம் ஜெர்மனியை எதிர்த்துப் பெற்ற வெற்றியை நினைவுகூருவதற்காக கட்டப்பட்டது. இதனை அப்துல் காதர் என்பவர் தனது சொந்தச் செலவில் கட்டி அப்போதைய சென்னை மாநில ஆளுநர் ஆர்தர் ஹோப் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க