News May 12, 2024

மயிலாடுதுறையில் மர்ம மரணம் 

image

மயிலாடுதுறையில் புனுகீஸ்வரர் வடக்கு வீதியை சேர்ந்த கண்ணையன் என்பவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.தொடர்ந்து அருகே உள்ள வீட்டின் மாடியில் கண்ணையன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை போலீசார் இறந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News August 31, 2025

மயிலாடுதுறை: கால்நடை மருந்தகத்தை பார்வையிட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கோமல் ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தகத்தை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். கால்நடை மருந்தகத்தில் மருந்துகளை இருப்பு மற்றும் கோப்பு நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து கேட்டறிந்தார். கால்நடை மருத்துவர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News August 30, 2025

மயிலாடுதுறை: வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்!

image

மயிலாடுதுறை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>இந்த <<>>லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

News August 30, 2025

மயிலாடுதுறை: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்!

image

மயிலாடுதுறை மக்களே, இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!