News March 19, 2024
மயிலாடுதுறையில் பைக் திருடிய இருவர் கைது

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் மற்றும் கவியரசன் ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
Similar News
News August 5, 2025
100 ஆண்டுகள் பழமையான கிணறு தூர்வாரும் பணி

திருவெண்காடு அருகே மணிக்கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆகஸ்ட் 29ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் திருப்பணி வேலைகள் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள 100ஆண்டுகள் பழமையான கிணறு துர்ந்து போய் பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில் கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விரும்பினர். இதனைத் தொடர்ந்து கிணறு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.
News August 5, 2025
மயிலாடுதுறை: டிகிரி போதும் ரூ.1.5 லட்சத்தில் வேலை!

மயிலாடுதுறை இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள மொத்தம் 126 காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் இங்கு<
News August 5, 2025
மயிலாடுதுறை: இப்படி ஒரு பெயர்களா?

மயிலாடுதுறை மாவட்டம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ளது. அவ்வாறு உள்ள இம்மாவட்டத்தின் முக்கிய ஊர்கள் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை காண்போம். மயிலாடுதுறை – மாயவரம், பூம்புகார் – காவிரிப்பூம்பட்டினம், தரங்கம்பாடி – ட்ரான்கேபார், சீர்காழி – பிரம்மபுரம், குத்தாலம் – திருத்துருத்தி, செம்பனார்கோவில் – இந்திரபுரி, மணல்மேடு – நாகநாதபுரம் என அழைக்கப்பட்டது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க