News June 1, 2024
மயிலாடுதுறையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News April 20, 2025
மயிலாடுதுறையில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பதவிக்கு 42 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள்<
News April 20, 2025
மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் எண்கள்

கோடைக்காலம் நெருங்கும் நிலையில் வெயிலில் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும்.
▶ தீயணைப்பு நிலையம், குத்தாலம் – 04364234101,
▶ தீயணைப்பு நிலையம், மணல்மேடு – 04364254101,
▶தீயணைப்பு நிலையம், சீர்காழி – 04364270101,
▶ தீயணைப்பு நிலையம், மயிலாடுதுறை – 04364222101. ஷேர் பண்ணுங்க.
News April 20, 2025
மயிலாடுதுறையில் பயிற்றுநர்கள் நேர்முகத் தேர்வு

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஎன்எஸ்யுஆர்பி இலவச பயிற்சி வகுப்புகளுக்கான பயிற்றுநர்கள் நேர்முகத் தேர்வு வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் தங்களது சுய விபரங்களை studycircledeomayil@gmail.com என்ற இணைய முகவரிக்கு அனுப்பலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க