News April 20, 2025

மயிலாடுதுறையில் பயிற்றுநர்கள் நேர்முகத் தேர்வு

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஎன்எஸ்யுஆர்பி இலவச பயிற்சி வகுப்புகளுக்கான பயிற்றுநர்கள் நேர்முகத் தேர்வு வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் தங்களது சுய விபரங்களை studycircledeomayil@gmail.com என்ற இணைய முகவரிக்கு அனுப்பலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க 

Similar News

News August 9, 2025

241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

image

சுதந்திர தினத்தை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

மயிலாடுதுறை: ரூ.1,42,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க !

News August 9, 2025

மயிலாடுதுறையில் இப்படி வரலாறா?

image

மயிலாடுதுறை கடைவீதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு 1943 இல் கட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சின்னமாகும். இந்த மணிக்கூண்டு இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவம் ஜெர்மனியை எதிர்த்துப் பெற்ற வெற்றியை நினைவுகூருவதற்காக கட்டப்பட்டது. இதனை அப்துல் காதர் என்பவர் தனது சொந்தச் செலவில் கட்டி அப்போதைய சென்னை மாநில ஆளுநர் ஆர்தர் ஹோப் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!