News October 19, 2025
மயிலாடுதுறையில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு!

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.
அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்று மேற்கண்ட நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
மயிலாடுதுறை: குடை எடுத்த செல்ல மறந்துடாதீங்க!

வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!
News October 21, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ‘பொதுமக்கள் மழை காலங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது குடை பிடித்தபடி வாகனம் ஓட்டிச் செல்ல வேண்டாம். இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல் காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.