News June 5, 2024

மயிலாடுதுறையில் நோட்டா வாங்கிய எண்ணிக்கை

image

மயிலாடுதுறை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதனிடையே நோட்டாவிற்கு 8695 வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 1088164 வாக்குகள் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Similar News

News August 18, 2025

மயிலாடுதுறை: போன் Missing-ஆ? இத பண்ணுங்க

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News August 18, 2025

இணையதளத்தில் வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

image

இணையதளத்தில் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. போலியான இணையதள பக்கத்தில் உங்களது சுய விபரங்களை பதிவிடுவதால் உங்களது தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பணம் பறிபோக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து எண் 1930 தொடர்பு கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது.

News August 18, 2025

மயிலாடுதுறையின் பெயர் காரணம் இதுவா?

image

பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிட பட்டுள்ளதால் இப்பகுதி மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. மேலும் 18 ஆம் நூற்றாண்டு வரை “மயூரபுரம்” என்றும் பின்பு “மாயவரம்” என்றும் அழைக்கப்பட்ட இந்நகரம் 1982ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது “மயிலாடுதுறை” என பெயர் மாற்ற அரசாணை வெளியிடப்பட்டது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!