News October 10, 2025
மயிலாடுதுறையில் தஞ்சாவூர் சரக டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சாவூர் காவல் சரக காவல் துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் ஆய்வு மேற்கொண்டார். காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குற்றப்பிரிவு, மாவட்ட கிடங்கு பிரிவு, அமைச்சுப் பணியாளர்கள் பிரிவு ஆகியவற்றில் வருடாந்தர ஆய்வு மேற்கொண்டார். பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் கிடங்கில் உள்ள பொருட்களை சரிபார்த்து காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
Similar News
News October 10, 2025
மயிலாடுதுறை: கிராம ஊராட்சி செயலர் வேலை!

மயிலாடுதுறை மக்களே தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணி: கிராம ஊராட்சி செயலர்
2.கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு
3.சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
4.ஆன்லைனில் விண்ணப்பம்: <
பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு டிசம்பர் 17-ம் தேதி பணி நியமன ஆணை வழங்கபடவுள்ளது. நீங்களும் உடனே Apply பண்ணுங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News October 10, 2025
புதிய வகை மோசடி: மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை

பண்டிகை நேரம் என்பதால் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக அங்கீகாரம் இல்லாத இணையதள பக்கத்திலிருந்து வரும் போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
News October 10, 2025
மயிலாடுதுறை: கனரா வங்கியில் வேலை APPLY NOW!

கனரா வங்கியில் தமிழ்நாடு முழுவதும் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Graduate Apprentices
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.15,000
4.வயது வரம்பு: 20-28 (SC/ ST-33, OBC 31)
5. கடைசி தேதி: 12.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <