News March 31, 2024
மயிலாடுதுறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

மயிலாடுதுறையில் வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான விவரங்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வாக்காளர் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையான விபரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 6, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில், `இணையதளங்களில் உங்களுக்கு பரிசு பொருள் கிடைத்திருக்கிறது, பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் என போலியாக வரும் மோசடிக்காரர்கள் சித்தரிக்கும் பரிசு வலையில்` பொதுமக்கள் விழ வேண்டாமென கூறியுள்ளனர். மேலும், சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
News April 6, 2025
மயிலாடுதுறை விவசாயிகளுக்கு நற்செய்தி

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் விளைப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய ஆதார் எண், பேங்க் புக் ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் இணைந்து சீர்காழி (9080427055), செம்பனார்கோவில் (9943917494), மாணிக்கப்பங்கு (9843448803) ஆகிய பகுதியை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
News April 6, 2025
நிற்காமல் சென்ற ரயில்: விசாரணைக்கு உத்தரவு

மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயில் நேற்று காலை 8:50 மணிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தித்திற்கு வந்தது. இந்நிலையில் நடைமேடையில் நிற்காமல் ரயில் 200 மீட்டர் தூரம் தள்ளி நின்றது. இதனால் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். பின்னர் பின்னோக்கி எடுத்து வரப்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது. இதுகுறித்து தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.