News May 27, 2024
மயிலாடுதுறையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பாலம்

மயிலாடுதுறை திருமஞ்சன வீதி பாலம் நகராட்சியின் வாயிலாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தொடர்ந்து பாலம் தற்போது சேதம் அடைந்து ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்துள்ளது. இந்த பாலத்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் புதிய பாலத்தை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News December 3, 2025
மயிலாடுதுறை: நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சம்பா விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News December 3, 2025
மயிலாடுதுறை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News December 3, 2025
மயிலாடுதுறையில் பெய்த மழை நிலவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 17.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 7.20 மி.மீ, மணல்மேட்டில் 8 மி.மீ, சீர்காழியில் 16.40 மி.மீ, தரங்கம்பாடியில் 12.30 மி.மீ, செம்பனார்கோயில் 9 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


