News April 1, 2024
மயிலாடுதுறை:முதலமைச்சரை விமர்சித்த எதிர்கட்சி தலைவர்

மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரச்சார உரையாற்றினார். அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டம் நாங்கள் அமைத்து தந்தோம் எனவும் , ஆனால் நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு மு.க.ஸ்டாலின் பெயர் வைத்துள்ளார் என்றும் விமர்சித்தார்.
Similar News
News February 8, 2026
மயிலாடுதுறை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

மயிலாடுதுறை மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE செய்து உதவுங்க!
News February 8, 2026
மயிலாடுதுறை: போலீசார் அதிரடி – இளைஞர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்தில் இன்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக பாண்டி மதுபானங்களை விற்பனை செய்த, கருவாழக்கரை மேலையூரை சேர்ந்த சின்ராசு (எ) ராதாகிருஷ்ணன்(29) எனவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பைக் மற்றும் 200 எண்ணிக்கையிலான பாண்டி மதுபான பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.
News February 8, 2026
மயிலாடுதுறை: 50, 371 பேர் பயன் – ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை 3 கட்டங்களாக 130 முகாம்கள் நடைபெற்றன. இம்முகாமில் 59,349 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 50371 ஏற்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 7849 விண்ணப்பங்களில் 4397 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ரூ.52,76,400 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


