News June 19, 2024
மயிலாடுதுறை:அமைச்சரை சந்தித்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பினர்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக பேராசிரியர் ஜெயராமன், மகேஸ் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கூறைநாடு PM.பாசித், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் O.ஷேக் அலாவுதீன் உள்ளிட்ட குழுவினர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை சந்தித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மீத்தேன் சுற்றுச்சூழல் நிலத்தடி நீர் மாசுபடுதல் குறித்து கோரிக்கைகளை முன் வைத்தனர்.
Similar News
News August 17, 2025
தென்பாதி மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சீர்காழி தென்பாதியில் உள்ள சாலைகரையாள் எனும் மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து அபிராமி அந்தாதி தேவார பாராயணம் செய்து 108 போற்றி மந்திரங்கள் உச்சாடனம் செய்து திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
News August 17, 2025
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோவில் கைது

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிளஸ் 2 மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு பெற்றோருடன் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர் தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு அருவாபாடி பகுதியை சேர்ந்த வீரப்பன் (28)என்பவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
News August 17, 2025
சமூக நலத்துறையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் -ஆட்சியர்

மயிலாடுதுறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் மிஷன் சக்தி திட்டத்தில் மத்திய மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்துதல் நிதி ஒதுக்கீடு போன்ற பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் mayiladuthurai.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகிற 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.