News November 6, 2024

மயிலம் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

image

திண்டிவனம் அடுத்துள்ள பிரசித்திப் பெற்ற மயிலம் முருகன் கோயிலில் நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவருக்கு, கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது, கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உதவியாளர்கள் உடனிருந்தனர்.

Similar News

News August 17, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆக.16) இரவு முதல் இன்று (ஆக.17) காலை வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 16, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 16, 2025

நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்

image

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை விழுப்புரத்தில் 7936 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில்நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. விலங்குகளின் உமிழ்நீர் மூலம் பரவும் கொடிய நோயான ரேபிஸ் தற்போது அதிகமாக பரவி வருவதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றால் ராபிஸ் பாதிப்பை தடுக்கலாம் என்று கூறுகின்றனர்

error: Content is protected !!