News March 29, 2024
மயங்கி விழுந்த கட்டிட தொழிலாளி திடீர் சாவு

நெல்லை: தருவை அருகே புது காலனியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மதன் நேற்று (மார்ச் 28 ) காலை திடீரென்று நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 29, 2026
சுடுபிடிக்க தொடங்கும் நெல்லை தொகுதி; அடுத்த அறிவிப்பு !

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 70 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் போட்டியிடுவார் என சற்றுமுன் அறிவிப்பு வெளியானது. நெல்லையில் திமுக, அதிமுகவை சேர்ந்த மா.செ-க்கள் களமிறங்கும் நிலையில், திமுக,அதிமுக, தவெக, நாதக நான்கு முனை போட்டியில் தற்போது புதகவும் இணைந்துள்ளது.
News March 29, 2026
BREAKING நெல்லை: த.வெ.க.,வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சற்றுமுன் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
நெல்லை – முருகன்
பாளையங்கோட்டை – மரியஜான்
நாங்குநேரி -ரெட்டியார்பட்டி நாராயணன்
ராதாபுரம் – கிறிஸ்டோபர்
அம்பை – ராஜகோபால்
News March 29, 2026
நெல்லை: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

நெல்லை மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.


