News January 7, 2026

மம்தாவுக்கு மனநல சிகிச்சை தேவை: பாஜக

image

மே.வங்கத்தில் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு, பாஜக IT செல் உருவாக்கிய APP-ஐ ECI பயன்படுத்துவதாக <<18784581>>மம்தா பானர்ஜி<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் (பாஜக) சுவேந்து அதிகாரி, மம்தாவுக்கு மனநல சிகிச்சை தேவை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படி சிகிச்சை பெறவில்லையெனில், சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 27, 2026

சென்னை ஏர்போர்ட்டில் தீ விபத்து: விமான சேவை பாதிப்பு

image

சென்னை ஏர்போர்ட்டின் 2-வது முனையத்தில் உள்ள கேண்டீன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அங்கு நிலவும், பதற்றம் காரணமாக விமானங்கள் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகள் ஏர்போர்ட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

News January 27, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, நாளை (ஜன.28) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேபோல், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, கரூர் வட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 27, 2026

பெண்களுக்கு CM ஸ்டாலின் கொடுத்த Promise

image

சென்னையில் மகளிர் உச்சிமாநாட்டை தொடங்கி வைத்து, CM ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அதில் இந்தியாவில் பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவித்த அவர், பெண்கள் சமூகத்தின் முதுகெலும்பு என குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்கள் மரியாதையான ஊதியத்தை பெற்றிடவும், அச்சம் இல்லாமல் வாழவும் திமுக அரசு துணை நிற்கும் என்ற Promise-ஐ தான் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!