News November 5, 2024

மமக சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்க இடம் ஆய்வு

image

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பம்மல், அனகாபுத்தூர் பகுதி மக்கள் பயன்படும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான விழா விரைவில் நடைபெற இருக்கிறது. விழா நடத்துவது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் எம்.யாகூப் தலைமையில் பம்மல் பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆம்புலன்ஸ் தொடங்கப்படவுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

Similar News

News August 9, 2025

செங்கல்பட்டுக்கு இன்று லீவு இல்லை

image

கடந்த ஜூலை 28ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிபூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 9ம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில்,அரசு துவக்கபள்ளிகளில், 1ம்வகுப்பில் கடந்தாண்டு 7,227மாணவர்கள் சேர்ந்தநிலையில், இந்தாண்டு 6,073 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். துவக்கபள்ளிகள்481, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகள் 83, நடுநிலைபள்ளிகள் 189, அரசு உதவி பெறும்நடுநிலை பள்ளிகள் 27 என் மொத்தம் 782 பள்ளிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News August 9, 2025

செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், திருப்போரூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற அரசின் சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து 45 நாட்களில் தீர்வு பெறலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!