News December 27, 2024
மன்மோகன் சிங் மறைவு – கள்ளக்குறிச்சி எம்.பி இரங்கல்

இந்திய ஒன்றியத்தின் பிரதமராக பத்தாண்டு காலம் மிகச் சிறப்பாக பணியாற்றிய பொருளாதார அறிஞர் மன்மோகன்சிங் மறைந்தார் என்ற செய்தியை அறிந்து வருத்தம் அடைகின்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்களுக்கும் திமுக தொண்டர்களில் ஒருவராக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் என கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன் வெளியிட்டுள்ள இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்
Similar News
News September 12, 2025
கள்ளக்குறிச்சி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

கள்ளக்குறிச்சி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.
▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
▶️மீறினால் தொடர்புடைய அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News September 12, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய நாளை அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE)
News September 12, 2025
கள்ளக்குறிச்சியில் கேன் தண்ணீர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.