News December 27, 2024
மன்மோகன் சிங் மறைவால் ‘இந்திய நாட்டிய விழா’ ரத்து

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில், இந்திய நாட்டிய விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதால் ‘இந்திய நாட்டிய விழா’ ஜன.1ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. ஜன.2ஆம் தேதி மாலை வழக்கம்போல் நாட்டிய விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 1, 2025
செங்கல்பட்டு: சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷ்வா. இவர் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பைக்கில் அருகிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அப்போது முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் ஜோஸ்வாவின் கண்கள் தானம் அளிக்கப்பட்டது.
News October 1, 2025
செங்கல்பட்டில் இன்று இரவு ரோடு செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 30, 2025
செங்கல்பட்டு: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.