News December 30, 2025
மன்னீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நிகழ்வில் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார். முன்னதாக அவர் அன்னூரில் உள்ள பழமையான மன்னீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் அறங்காவலர் குழுவினர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Similar News
News January 29, 2026
கோவை: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

கோவை மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ-சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <
News January 29, 2026
கோவை: மனைவியின் மண்டையை உடைத்த கணவர்

கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி ஹேமலதா. இவர் கடந்த 21-ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஒண்டிப்புதூர் சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டில் குருமூர்த்தி இல்லை. பின், மது போதையில் வந்த அவரிடம் ஹேமலதா கேள்வி கேட்க அவரை கட்டையால் மண்டையை உடைத்துள்ளார். புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
News January 29, 2026
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் போட்டியா?

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. இந்நிலையில் கடந்த தேர்தலில் பாஜக சார்பில் கோவை தெற்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் கோவை வடக்கில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வானதி சீனிவாசன் அங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


