News February 24, 2026

மன்னிப்பு கேட்க தயாராகிறாரா மாணிக்கம் தாகூர்?

image

கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய, CM ஸ்டாலின் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்க மாணிக்கம் தாகூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாணிக்கம் தரப்பில் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம். அத்துடன் காங்., வளர்ச்சிக்காக பேசியவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கேட்பதால், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாமல் தலைமை திணறுவதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Similar News

News March 3, 2026

முட்டை விலை மளமளவென குறைந்தது

image

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மளமளவென சரிந்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டு முட்டைகள் தேக்கம் அடைந்திருப்பதே விலை சரிவுக்கு காரணம். கடந்த 1 வாரத்தில் மட்டும் சுமார் 1 ரூபாய் வரை விலை குறைந்து ₹4.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், சில்லறை விற்பனையிலும் முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளது. உங்க ஏரியாவில் 1 முட்டையின் விலை எவ்வளவு?

News March 3, 2026

EXCLUSIVE: சந்திர கிரகணம் போட்டோஸ்

image

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. இந்தியாவில் பகல் பொழுதாக இருந்ததால் அதிக நேரம் பார்க்க முடியவில்லை. அதேநேரம் வெளிநாடுகளில் பிறை வடிவம், ரத்த வண்ணத்தில் காணப்பட்ட நிலவை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அதனை ஆச்சரியத்துடன் போட்டோ எடுத்து தங்களது SM பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அப்படியான போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். அதனை ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE IT

News March 3, 2026

தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது: EPS

image

<>நெல்லை <<>>அருகே பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு என்பது ஒரு விஷயமே இல்லை என்பது போலவே, கடந்த 5 ஆண்டுகளை திமுக அலட்சியமாக கடந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல விளம்பரங்கள் செய்யப்படும் நிலையில், உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுவதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!