News April 29, 2025
மன்னார்குடி பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்

மன்னார்குடியை சேர்ந்த லெனின் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் பதிவிட்டதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று விடுதலை செய்யப்பட்ட அவருக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
Similar News
News August 16, 2025
திருவாரூர்: குடும்ப வன்முறையா? உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8825669037) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News August 16, 2025
திருவாரூர்: விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தின தேசிய பண்டிகை விடுமுறை நாளான நேற்று (ஆக.15) திருவாரூர் மாவட்டத்தில், 34 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்; 32 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 66 நிறுவனங்கள் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, முறையாக அளிக்க வழிவகை செய்யாமல் பணியில் அமர்த்தியது கண்டறியப்பட்டு, அந்த 66 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாக, உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் (15.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ அழைக்கவும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!