News March 31, 2024
மன்னார்குடி பகுதியில் கலெக்டர் ஆய்வு

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பதட்டமான வாக்கு சாவடி மையங்களை திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News August 14, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (14.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு மேற்கண்ட எண்களை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
சுதந்திர தின அட்டவணை வெளியீடு

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் சுதந்திர தின நிகழ்ச்சி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் விழா மேடைக்கு வருகை தந்து 9:05 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைக்கும் நிகழ்வும், 9.07 க்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வும், 9:15 க்கு சிறப்பாக பணி புரிந்த அரசு அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கல், 9:30 க்கு கலை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
திருவாரூர்: 430 ஊராட்சிகளில் நாளை கிராமசபை கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், சுதந்திர தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம்,இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.