News March 21, 2024
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் புதிய திமுக மக்களவை வேட்பாளர்

திமுக-வில் தஞ்சாவூர் தொகுதியில் 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர் பழனிமாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது திமுக தலைமை. முரசொலி, 2014 முதல் 20 வரை திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராகவும், 2022இல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் இருந்தார்.
Similar News
News February 2, 2026
திருவாரூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருவாரூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
திருவாரூர்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 2, 2026
திருவாரூர்: சிறையில் கைதி திடீர் உயிரிழப்பு

மன்னார்குடி அடுத்த வடுவூரை சேர்ந்தவர் உலகநீதி (58). இவர் வடுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2021-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த 20-ம் தேதி முதல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


