News January 24, 2025

மன்னார்குடிக்கு வருகை தரும் பிரேமலதா விஜயகாந்த்

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாளை (ஜன.25) தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மன்னார்குடிக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் பணியில் திருவாரூர் மாவட்ட தேமுதிகவினர் ஈடுபட்டுள்ளனர். 

Similar News

News September 16, 2025

திருவாரூர் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரங்கள்

image

பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை விரைந்து வழங்கிடும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) மன்னார்குடி சிட்டி ஹால், திருக்காரவாசல் ஆலயா திருமண மண்டபம், திருராமேஸ்வரம் மஞ்சனவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, விஜயபுரம் முஸ்லீம் ஊர் உறவின்முறை ஜமாத் கட்டிடம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. SHARE

News September 16, 2025

திருவாரூர்: கணவன்-மனைவி தற்கொலை

image

திருவாரூர், சரபோஜிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜு-மல்லிகா தம்பதியினர். இவர்களது கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களது உறவினர்களிடம் தகவல் கூறினர். இதையடுத்து வீட்டை திறந்து பார்த்த போது, கணவன்-மனைவி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேரளம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News September 15, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.15) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!