News November 5, 2025

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது வருத்தம்: TTV

image

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது வருத்தமளிப்பதாக TTV தினகரன் கூறியுள்ளார். 2026 தேர்தலில் EPS எதிர்கட்சி தலைவராக ஆவதற்கு வாய்ப்பில்லை என புரிந்து கொண்டு தான் நீண்ட காலமாக அதிமுகவில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் சேர்ந்திருப்பதாகவும் TTV தெரிவித்துள்ளார். EPS-ன் நடவடிக்கைகளை பார்த்து மனமுடைந்த காரணத்தால், திமுகவில் இணையும் முடிவை அவர் எடுத்திருப்பார் என்றும் TTV பேசியுள்ளார்.

Similar News

News November 5, 2025

ராமதாஸை சுற்றி திமுகவின் கை கூலிகள்: அன்புமணி

image

ராமதாஸை சுற்றி துரோகிகள், தீயசக்திகள், திமுகவின் கை கூலிகள் உள்ளதாக அன்புமணி கூறியுள்ளார். ராமதாஸிடம் இருந்து தன்னை அவர்கள் பிரித்துவிட்டதாகவும், அந்த துரோகிகள் உள்ள வரை கண்டிப்பாக இணையமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை மன உளைச்சலில் கூறுவதாகவும் அன்புமணி குறிப்பிட்டார். 10 மாதங்களாக நீடிக்கும் அப்பா, மகன் மோதல் பாமகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

News November 5, 2025

புன்னகை பூவே மிருணாள் தாக்கூர்

image

தமிழ் திரையுலகில் தடம் பதிக்காவிட்டாலும் ரசிகர்களின் மனதில் பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறப்பவர் மிருணாள் தாக்கூர். SM-ல் ஆக்டிவாக உள்ள மிருணாள் தாக்கூர், இந்த வார ஸ்பெஷலாக கண்கவர் ஆடையில் போட்டோஷூட் எடுத்து அவற்றை பதிவிட்டுள்ளார். இவற்றுக்கு ஃபயர் விடும் ரசிகர்கள், தமிழில் எப்போது நடிப்பீர்கள் என கமெண்ட் செக்‌ஷனில் கேட்கின்றனர். போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்.

News November 5, 2025

புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு… அதிர்ச்சி செய்தி

image

புகைப் பழக்கத்தால் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை பாதிக்கும், அளவும் சுருங்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சிகரெட்களில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த உட்பொருட்கள் ஆணுறுப்பின் ரத்தநாளங்களை சேதப்படுத்துவதால் ரத்தவோட்டம் குறைந்து, நீளும் தன்மை பாதிக்கிறது. உடல்பருமன் அதிகரிப்பது, புராஸ்டேட் அறுவை சிகிச்சை, பெய்ரோனி நோய் உள்ளிட்டவற்றாலும் ஆணுறுப்பு சிறுத்துப் போகும் ஆபத்து உள்ளது. SHARE IT

error: Content is protected !!