News May 9, 2024

மனைவி கழுத்தை நெறித்து கொன்ற கணவன்

image

ஊட்டி ஏக்குன்னியை சேர்ந்தவர் மாணிக்கம் (60). தைலம் காய்ச்சும் இடத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மனைவி பங்கஜத்துக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நடந்த தகராறில் மனைவியின் கழுத்தை துணியால் இறுக்கியதில் அதே இடத்தில் மனைவி உயிரிழந்தார். தைலம் ஷெட்டில் ஒளிந்திருந்த மாணிக்கத்தை, இன்ஸ்பெக்டர் அல்லி ராணி பிடித்து கைது செய்தார்.

Similar News

News December 29, 2025

நீலகிரி: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

நீலகிரி மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே<> கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 29, 2025

ஊட்டியில் மாற்றம் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊட்டி தலைமை அஞ்சலகத்தில் மக்களின் வசதியை அதிகரிக்கும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அலுவலக நேரம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.பொது மக்கள் அனைவரும் இந்த நீட்டிக்கப்பட்ட
அலுவலக நேர சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

நீலகிரியில் அழியும் அபாயம்!

image

நீலகிரியில் பரவலாக காணப்பட்ட அரிய வகை கருமந்திகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை, கூடலுார் ஓவேலி, குண்டம்புழா, நாடுகாணி மற்றும் நடுவட்டம் பகுதிகளில் குறிப்பிட்ட சில வனங்களில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. இதன் இறைச்சி, மருத்துவ குணம் கொண்டதாக கூறி, வேட்டையாடி வருவதாலும், காடுகள் அழிக்கபட்டதாலும், இங்கும் இதன் எண்ணிக்கை குறைந்து இனமே அழியும் அபாயத்தில் உள்ளது என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!