News January 7, 2026
மனைவி அடிக்கிறார்.. நடிகர் தனுஷ் கதறல்

கன்னட நடிகர் தனுஷ் தனது மனைவி அஷ்ரிதாவுக்கு எதிராக போலீசில் புகாரளித்துள்ளார். பொய் சொல்லிவிட்டு வெளிநாடு சென்றது குறித்து கேட்டதற்கு தன்னை அடித்து துன்புறுத்தியதுடன், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பழிசுமத்த அஷ்ரிதா முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனிடையே, தனுஷுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும், வரதட்சணை கேட்டு தன்னை தாக்கியதாகவும் அஷ்ரிதா போலீசில் புகாரளித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
அரசியலில் களமிறங்குகிறாரா மாரி செல்வராஜ்?

பட்டியலின மக்களின் வாழ்வியலை படமாக இயக்கிவரும் மாரி செல்வராஜுக்கு அவர் சார்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் மத்தியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தென்மாவட்டங்களில் அச்சமூக வாக்கை பலப்படுத்தும் நோக்கில் மாரியை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் விஜய்க்கு செல்லும் கணிசமான வாக்குகளும் தங்கள் பக்கம் திரும்பும் என திமுக நம்புகிறதாம்.
News January 23, 2026
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் ₹20,000 மாறியது

தங்கம் விலை உயர்வை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று (ஜன.23) உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹20 அதிகரித்து ₹360-க்கும், கிலோ வெள்ளி ₹20,000 உயர்ந்து ₹3.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. நாளுக்கு நாள் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துகொண்டே வருவதால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு சாதகமாக உள்ளது.
News January 23, 2026
₹40 லட்சம் மோசடி.. ஸ்மிருதி Ex. காதலர் மீது புகார்!

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் Ex காதலர் பலாஷ் ₹40 லட்சம் மோசடி செய்ததாக விக்யான் மானே என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘நஸாரியா’ என்ற படம் தயாரிப்பதாகவும், அதில் தன்னை நடிக்க வைப்பதாகவும் கூறி ₹40 லட்சம் முதலீடு செய்ய கூறினார். எனினும் படம் தொடங்கப்படவே இல்லை. இதையடுத்து, காசை திரும்ப கேட்டபோது, பலாஷ் சரியாக பதிலளிக்க மறுக்கிறார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


