News February 24, 2026
மனைவியை ’சும்மா இருப்பவர்’ என அழைப்பது அநீதி: கோர்ட்

இனி ஜீவனாம்சத்தை தீர்மானிக்கும் போது, இல்லத்தரசியின் உழைப்பின் பொருளாதார மதிப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும் என டெல்லி HC உத்தரவிட்டுள்ளது. வேலையின்மையை சுட்டிக்காட்டி மனைவியை ’சும்மா இருப்பவர்’ என்று அவரை அலட்சியப்படுத்துவது அநீதி என கூறியுள்ளது. குடும்ப தலைவியாக இருக்கும் மனைவி குழந்தைகள் மற்றும் வீட்டை கவனிப்பதன் மூலம் முக்கிய பங்களிப்பை செய்கிறார் எனவும் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
Similar News
News February 26, 2026
செய்முறை தேர்வு.. மார்ச் 2-க்குள் பறந்த உத்தரவு

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நிறைவடைந்துவிட்டன. தனித் தேர்வர்களுக்கு இன்று செய்முறை தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாணவர்களின் செய்முறை தேர்வு மதிப்பெண்களை மார்ச் 2-க்குள் (திங்கள்கிழமை) அரசு தேர்வுத் துறையிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களே, எவ்வளவு மார்க் வாங்குவீங்க?
News February 26, 2026
துணை நடிகையின் தந்தை கொலை வழக்கில் 9 பேர் கைது!

கொடைக்கானலில் ‘மாயாவி’ பட <<19208816>>துணை நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை சூரியநாராயணன் <<>>கொல்லப்பட்ட வழக்கில் 9 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. சொத்து பத்திரங்கள், நகை, பணத்துக்காக கொலை நடந்துள்ளதாகவும், கைதானவர்கள் அனைவரும் ஹவாலா மோசடியில் ஈடுபடுபவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மகேந்திரன் என்ற நபர் மட்டும் தப்பிய நிலையில், அவரை 3 தனிப்படைகள் தீவிரமாக தேடி வருகின்றன.
News February 26, 2026
’கேரளா ஸ்டோரி 2’ ரிலீஸுக்கு தடை!

நாளை ரிலீசாக இருந்த நிலையில் ’கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்திற்கு இரண்டு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து கேரளா HC உத்தரவிட்டுள்ளது. படத்தின் U/A சென்சார் சான்றிதழை ரத்து செய்ய கோரிய வழக்கில் இத்தீர்ப்பு வந்துள்ளது. டீசரில் வெளியான காட்சிகள் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும், படத்தை மீண்டும் தணிக்கை செய்யுமாறும் சென்சார் போர்டுக்கு HC அறிவுறுத்தியுள்ளது.


