News October 8, 2024
மனைவியை சுத்தியலால் அடித்து கொண்ற கணவன்

ராமேசுவரம் ஏரகாடு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவருக்கும் இவரது மனைவி தனலட்சுமிக்கும் இடையே நேற்று மதியம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தர்மராஜ் சுத்தியலால் தனலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்த நிலையில் அவர் மயங்கினார். பின்னர் கல்லை தலையில் போட்டு கொலை செய்து வீட்டின் முன்பெகுழி தோண்டி புதைத்துள்ளார். போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.
Similar News
News August 27, 2025
ராம்நாடு: VAO லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க..

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News August 27, 2025
ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
News August 27, 2025
ராம்நாடு: அரசு பரிசுத்தொகை ரெடி! மரம் வளர்க்க ரெடியா?

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆர்வமுள்ள நபர்கள் (அ) அறக்கட்டளைகள் 2 1/2 ஆண்டுகளுக்கு அரசு நிலத்தில் மரம் நடுதலை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு மரம் வளர்த்தால் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வெகுமதி (பரிசுத்தொகை) அளிக்கப்படும். மாநில விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்படும். தொடர்புக்கு – 7708633668. நம்ம ஊரை பசுமையாக்க எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.