News February 28, 2025

மனைவியை அரிவாள்மனையால் தாக்கிய கணவன் கைது

image

திருச்சி, உய்யகொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி. இவரது கணவர் சிவமுருகன். ருக்மணி வேலைக்கு செல்வது, சிவ முருகனுக்கு பிடிக்காத நிலையில், இவர்களுக்கு இடையே நேற்றைய முந்தினம் (பிப்.26) வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிவமுருகன், ருக்மணியை அரிவாள்மனையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ருக்மணி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சிவமுருகனை கைது செய்துள்ளனர்.

Similar News

News April 10, 2026

திருச்சி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

திருச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News April 10, 2026

போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்தவர் கைது

image

திருச்சி விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ரவிச்சந்திரன் என்ற பயணியை சோதனை செய்தபோது, அவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியாக பாஸ்போர்ட் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. உடனே அதிகாரிகள் அவரை கைது செய்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News April 10, 2026

திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா..?

image

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!