News April 1, 2025
மனைவியுடன் சண்டை… சோகத்தில் கணவன் தற்கொலை !

கரூர்: கடவூர் தாலுகா சேர்வைக்காரன்பட்டி அடுத்த களத்துப்பட்டியைச் சேர்ந்த தம்பதி பழனியம்மாள் – மலைச்சாமி. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனமுடைந்து போன மலைச்சாமி இன்று(ஏப்.1) வீட்டின் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News August 14, 2025
மக்களே உஷார்..கரூரில் இன்று மின் தடை!

கரூர் மாவட்டத்தில் உள்ள ▶️உப்பிடமங்கலம், ▶️எஸ். வெள்ளாளப்பட்டி, ▶️ஒத்தக்கடை, ▶️பாலம்மாள்புரம், ▶️தாளப்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 14) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, இந்த துணை மின்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News August 14, 2025
தொழில் பயிற்சி நிலையத்தில் கால அவகாசம் நீட்டிப்பு

கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் 23.06.2025 முதல் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பெறப்பட்டு வருகிறது. தற்பொழுது கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324-222111, 9499055711, 9499055712) வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
News August 13, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர் மாவட்டத்தில் நாளை (14.08.25) திருமா நிலையூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மருத்துவ காப்பீடு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய. ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற பல கோரிக்கைகளை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.