News April 23, 2025
மனைவியிடம் பழகிய நபருக்கு அரிவாள் வெட்டு!

குளித்தலை அருகே பொய்யாமணி புலவர் புரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (55) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ராவணன் என்பவரின் மனைவி ரம்யாவுடன் கடந்த சில வருடங்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ராவணன் செந்தில்குமாரை அரிவாளால் தலையில் வெட்டி காயம் ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து நங்கவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
கரூர்: SIR கணக்கீட்டு படிவம் குறித்து சந்தேகமா?

கரூரில் SIR கணக்கீட்டு படிவம் குறித்து சந்தேகம் இருந்தால், உங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். ECINET இணையதளத்தில் பதிவு செய்தபின் “Book a Call with BLO” தேர்வு செய்து, கைபேசி எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை வழங்கி பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு உதவி எண்: 1950, வாட்ஸ்அப்: 9444123456 தொடர்பு கொள்ளவும்.
News November 13, 2025
அரவக்குறிச்சி அருகே விபத்து ஒருவர் பலி

அரவக்குறிச்சி சீத்தப்பட்டி அருகே, ராமு, முத்தழகன் மற்றும் நட்சத்திரா ஆகியோர் நான்கு சக்கர வாகனத்தில் சென்றபோது, வாகனம் தடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள சுவற்றில் மோதியது. இதில் தலை குப்புற விழுந்த நட்சத்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்ற இருவர் சிகிச்சையில் உள்ளனர். அரவக்குறிச்சி போலீசார் நேற்று விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.
News November 13, 2025
குளித்தலை அருகே வசமாக சிக்கிய இருவர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை அரசு கலைக்கல்லூரி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற அய்யனூரைச் சேர்ந்த பரத் (21), மலையாண்டி பட்டியைச் சேர்ந்த ராமன் (20) ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.


