News March 10, 2026

மனைவிக்கு உருக்கத்துடன் நன்றி சொன்ன சஞ்சு சாம்சன்

image

டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமான சஞ்சு சாம்சன் தன் மனைவி சாருலதாவுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். என் வாழ்க்கையில் கிரிக்கெட் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டு, அதை உங்களுக்கானதாகவும் மாற்றியதற்கு நன்றி என கூறியுள்ளார். என் வாழ்க்கையின் சிறந்த பக்கத்தை விட மோசமான பக்கத்திலும் இன்னும் ஆதரவாக நின்றீர்கள்; மிக்க நன்றி, என் அன்பான பொண்டாட்டி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 3, 2026

சஞ்சு பெயரை சொன்ன PM மோடி.. சர்ச்சை

image

கேரள தேர்தல் பிரசாரத்தின் போது, ​​சஞ்சு சாம்சனை பற்றி PM மோடி பாராட்டி பேசியுள்ளார். WC நாக்-அவுட் சுற்றில் சஞ்சு அற்புதமாக விளையாடியதாக குறிப்பிட்ட அவர், சஞ்சு ஒரு சிறந்த வீரர், அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் சிறந்து விளங்குவார்; அதேபோல், பாஜக தொண்டர்களும் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில், அரசியலுக்காக சஞ்சுவின் பெயரை பயன்படுத்துவதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News April 3, 2026

10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத தேமுதிக: விந்தியா

image

திமுகவில் மானம், ரோஷம் உள்ளவர்கள் இந்த முறை அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என விந்தியா பேசியுள்ளார். ஐந்து வருட திமுக ஆட்சியில் திமுககாரர்களே கடுப்பாகியுள்ளதாக கூறிய அவர், பத்து பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத தேமுதிகவுக்கு பத்து சீட்டை திமுக கொடுத்துள்ளதாகவும் சாடியுள்ளார். தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக அதிமுகவிற்கு வாக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

₹7 கோடி சொத்தை இழந்த உதயநிதி

image

2026 தேர்தலில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ₹20.64 கோடி என பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இது 2021-ஐக் காட்டிலும் ₹7 கோடி குறைவாகும். 2021 தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ₹27 கோடி என உதயநிதி குறிப்பிட்டிருந்தார். தற்போது ரெட் ஜெயன்ட் CEO-வாக இருக்கும் மகன் இன்பநிதியின் பெயரை தற்போதைய பத்திரத்தில் குறிப்பிடவில்லை.

error: Content is protected !!