News January 27, 2026
மனைவிக்காக ப்ரோமோஷன் செய்யும் டிரம்ப்

தனது மனைவியும், US-ன் முதல் பெண்மணியுமான மெலனியா குறித்த ஆவணப்படத்தை காண டிக்கெட் எடுங்கள் என்ற டிரம்ப்பின் ட்விட் சர்ச்சையாகியுள்ளது. பனிப்புயல் ஒருபக்கம், குடியேற்ற அதிகாரிகளால் நடந்த கொலை மறுபக்கம் என அமெரிக்காவே முடங்கியுள்ளது. இதற்கிடையே மெலனியா ஆவணப்படம் வெள்ளை மாளிகையில் சிறப்பு திரையிடப்பட்டது அந்நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் ஜன.30-ம் தேதி ரிலீசாகிறது.
Similar News
News February 4, 2026
தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹5,040 உயர்ந்து ₹1,19,200-க்கு விற்பனையாகிறது. குறிப்பாக, இரண்டு நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹7,600 அதிகரித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ் $166.46 (இந்திய மதிப்பில் ₹15,056) உயர்ந்து $5,075.83-க்கு விற்பனையாகிறது. இதனால் வரும் நாள்களில் இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
News February 4, 2026
அங்கன்வாடி குழந்தைகளை காக்க உயிர்நீத்த பெண்!

ம.பி.,யில் அங்கன்வாடி பள்ளியில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்த போது, திடீரென தேனீக்கள் தாக்கியுள்ளன. பதறிப்போன சமையல்கார பெண் காஞ்சன் பாய், உடனே தார்ப்பாய் போட்டு மூடி அவர்களை காத்துள்ளார். ஆனால், தேனீக்கள் கொட்டியதில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 3 குழந்தைகள், படுத்த படுக்கையான கணவருக்காக உழைக்கும் அவர், தன்னுயிரையும் பொருட்படுத்தாது மற்ற குழந்தைகளை காத்தது நெகிழ வைத்துள்ளது.
News February 4, 2026
திருக்குறளுக்கு கூட இம்முறை பட்ஜெட்டில் இடமில்லை: CM

மத்திய பட்ஜெட்டில் TN-க்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், எப்போதும் திருக்குறளையாவது பட்ஜெட்டில் சொல்வார்கள்; இம்முறை அதைக்கூட பயன்படுத்தவில்லை என சாடியுள்ளார். மேலும் சிறப்பு திட்டங்கள் கொண்டுவந்தாலும் வாங்களிக்க மாட்டார்கள் என நினைத்துக்கொண்டு TN-க்கு மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.


