News August 16, 2025

மனு தந்த மூதாட்டிக்கு பட்டா வழங்கிய அமைச்சர்

image

சுமைதாங்கி கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டு அமைச்சர் காந்தியிடம் மனு கொடுத்தார். அதை தொடர்ந்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி பட்டா தயார் செய்தனர். அதற்கான பட்டா ஆணையை இன்று மூதாட்டி வள்ளியம்மாளிடம் அமைச்சர் காந்தி நேரில் சென்று வழங்கினார்.

Similar News

News November 11, 2025

ராணிப்பேட்டை: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.(SHARE IT)

News November 11, 2025

ராணிப்பேட்டை: Loan App மோசடியா? உடனே புகார்!

image

ராணிப்பேட்டை மக்களே.., பாதுகாப்பற்ற Loan App-கள் மூலம் கடன் பெறாதீர்கள். இவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி, மிரட்டி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. வங்கிகள் மட்டுமே நம்பகமான வழி. போலியான செயலிகளால் ஏமாறாமல், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகங்கள் இருந்தால் உடனே 1930 அழையுங்கள் அல்லது<> இங்கே<<>> கிளிக் செய்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 11, 2025

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

image

ராணிப்பேட்டையில், வரும் நவம்பர் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200 காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு உரிய சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 9488466468ல்-ஐ அழைக்கலாம்.

error: Content is protected !!