News March 19, 2024

மனு அளிக்க மாற்று ஏற்பாடு செய்த கோவை மாநகராட்சி 

image

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.19) பொதுமக்கள் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் மனுக்களை போட்டு செல்லலாம். பின்னர் அந்த மனுக்கள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 28, 2026

வால்பாறை அருகே விபத்து: 25 பேர் காயம்

image

வால்பாறை அருகாமையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் இன்று காலை ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எஸ்டேட் பகுதியில் இருந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டருடன் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 25 எஸ்டேட் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

News January 28, 2026

கோவை வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (28-01-2026) மாலை 06:30 மணியளவில், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள். இதனை முன்னிட்டு, திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளர் V.செந்தில் பாலாஜி அறிவுறுத்தலின்படி, அவரை வரவேற்க கோவை மாவட்ட திமுக சார்பில், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News January 28, 2026

ரயில் நிலையம் ஏர்போர்ட் போல மாற போகுது

image

கோவை ரயில் நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மாற்ற ₹692.65 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட பணிகள் தொடங்குகின்றன. தெற்கு ரயில்வே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த இத்திட்டத்தில், விமான நிலையம் போன்ற வசதிகளுடன் 3 அடுக்கு மாடி முனையம் அமையவுள்ளது. கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் சுரங்கப்பாதை மற்றும் பார்க்கிங் வசதிகள் செய்யப்படவுள்ளன. இந்த நவீன ரயில் நிலையம் கொங்கு மண்டலத்தின் புதிய அடையாளமாக மாறும்.

error: Content is protected !!