News September 3, 2025
மனித உரிமைகள் பிரிவு காவல்துறை கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு காவல் துறை தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமையில், வேலூர் சரகத்தில் நிலுவையில் உள்ள SC/ST வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய பண பலன்களை விரைந்து கிடைக்கப்பெற ஏற்பாடு செய்ய வேண்டும், என்பன குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் சரகத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
Similar News
News September 5, 2025
வேலூர்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

▶️வேலூரில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
▶️அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
▶️ ஒருவேலை நீங்கள் தையல் பயிற்சி பெறாதவர்களாக இருந்தால் ‘<
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 5, 2025
வேலூர்: தொழில் பழகுனர் பயிற்சி மேளா

வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா (PMNAM) வரும் செப்.8ஆம் தேதி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் தொழில் நிறுவனங்கள் பயிற்சி வழங்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News September 5, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் இன்று(செப்.5) நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், மது பானங்கள் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார்.