News June 10, 2024
மனவளர்ச்சி குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு

புதுக்கோட்டை, நகராட்சி அம்பாள்புரம் 1ம் வீதி சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இயங்கும் கிரசண்ட் மனவளர்ச்சி குறைபாடு உடையோருக்கான சிறப்பு பள்ளியில் மதிய உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 21, 2025
புதுக்கோட்டை எழுத்தாளர் இவரை எத்தனை பேருக்கு தெரியும்?

21ஏப்ரல் 1925ல் புதுக்கோட்டையிலுள்ள அரிமழம் கிராமத்தில் பிறந்த வாண்டுமாமா, சிறுவர்களின் இலக்கியத்தில் முன்னணி எழுத்தாளர்,கோகுலம் இதழின் ஆசிரியராக பணியாற்றிய இவர், 65 சிறுகதைகள், 28 சித்திரக் கதைகள்,45 அறிவியல் நூல்கள் எழுதியுள்ளார். பல விருதுகளை பெற்ற இவர்,12 ஜூன் 2014இல் மறைந்தார் இவரது படைப்புகள் இன்றும் சிறுவர்களை மகிழ்விக்கின்றன,புதுக்கோட்டையில் பிறந்த எழுத்தாளர் இவரை எத்தனை பேருக்கு தெரியும்!
News April 21, 2025
புதுக்கோட்டை: ரூ.1,12,000 சம்பளத்தில் வேலை

மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது,10th, 12th, டிப்ளமோ,பட்டப்படிப்பு படித்த 18 – 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும் cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும்.SHARE IT
News April 21, 2025
புதுக்கோட்டை மாவட்ட வட்டாட்சியர் தொடர்பு எண்கள்

▶புதுக்கோட்டை வட்டாட்சியர்- 04322-221566, ▶விராலிமலை வட்டாட்சியர் – 04339-220777, ▶கறம்பக்குடி வட்டாட்சியர் -04322-255199, ▶பொன்னமராவதி வட்டாட்சியர்-04333-260188, ▶திருமயம் வட்டாட்சியர்- 04322-274223, ▶மணமேல்குடி வட்டாட்சியர்- 04371-250569, ▶ஆவுடையார்கோவில் வட்டாட்சியர்- 04371-233325, ▶ சார் ஆட்சியா் புதுக்கோட்டை- 04322-222219. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..