News November 10, 2025

மனநலம் குன்றியவர் ஆர்.பி.உதயகுமார்: டிடிவி

image

விரக்தியின் உச்சத்தில் இருப்பதால்தான் ஆர்.பி.உதயகுமார் தன்னை விமர்சிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார் மனநலம் குன்றியவர் போல பேசுவதாக கூறிய அவர், அதனால் பாவம் அவருக்காக நான் வருத்தப்படுகிறேன் என கிண்டலடித்துள்ளார். மேலும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றுதான் பாஜக முயற்சிப்பதாகவும், கட்சியை பிரிக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Similar News

News November 10, 2025

பள்ளி மாணவர்களுக்கான HAPPY NEWS

image

புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நவ.23, 24 தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 2 குழுக்களில் உள்ள 32 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் சுமையை மேலும் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

News November 10, 2025

SIR என்றாலும், சார் என்றாலும் திமுக அலறல்: EPS

image

SIR என்றால் திமுகவினர் அலறுகின்றனர்; பதறுகின்றனர் என்று EPS விமர்சித்துள்ளார். SIR மூலம் போலி வாக்காளர்களை நீக்குவது தவறா எனக் கேள்வி எழுப்பிய அவர், SIR என்றாலும், சார் என்றாலும் திமுக நடுங்குகிறது என்று விமர்சித்தார். மேலும், SIR-ஐ அமல்படுத்த தமிழ்நாட்டில் போதுமான கால அவகாசம் உள்ளதாக கூறிய அவர், திருட்டுத்தனமாக ஓட்டு போட வசதியாக இருக்கும் என்பதால் SIR-ஐ பார்த்து திமுக பயப்படுவதாகவும் சாடினார்.

News November 10, 2025

டெலிட்டான Insta அக்கவுண்ட்.. தவிக்கும் ரசிகர்கள்!

image

ஜடேஜா- சாம்சன் Trade நியூஸ் தான், சோஷியல் மீடியாவில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. CSK ரசிகர்கள் ஜடேஜாவை Trade செய்வதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் சூழலில், தற்போது திடீரென ஜடேஜாவின் இன்ஸ்டா அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஜடேஜா அணியில் நீடிப்பாரா இல்லையா என்ற கேள்விக்கு வரும் 15-ம் தேதி விடை கிடைத்துவிடும்.

error: Content is protected !!