News January 28, 2026
மனசாட்சியை அடமானம் வைத்த செங்கோட்டையன்: ADMK

நடிகர் கட்சியில் அடைக்கலமாகியுள்ள EX அமைச்சர்கள் செங்கோட்டையன், கிருஷ்ணன் ஆகியோர் மனசாட்சியை எங்கே அடமானம் வைத்துவிட்டார்கள் என RB உதயக்குமார் கேள்வி எழுப்பினார். MGR, ஜெயலலிதாவின் சேவைகளில் பங்கெடுத்தவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு, அதிமுகவிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து சொல்வதை, அவர்கள் மனசாட்சி ஏற்றுக்கொள்கிறதா எனவும் கேட்டுள்ளார். ADMK-ஐ விஜய் ஊழல் கட்சி என விமர்சித்திருந்தார்.
Similar News
News February 18, 2026
அஜித் பவார் மரணம்… CBI விசாரணை கேட்கும் மனைவி

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் மரணத்தில் சதி இருக்கலாம் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சந்தேகித்தனர். மேலும் விசாரணை மந்தமாக நடப்பதாக அவரின் மருமகன் ரோஹித் பவாரும் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில்
அஜித் பவாரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது மனைவி DCM சுனேத்ரா பவார் மற்றும் NCP தலைவர்கள், CM தேவேந்திர பட்னாவிஸிடம் கோரிக்கை அளித்துள்ளனர்.
News February 18, 2026
மோடி வருகை.. தீவிரமாகும் கூட்டணி பேச்சுவார்த்தை

மார்ச் 1-ம் தேதி மதுரை மாவட்டத்திற்கும், மார்ச் 6-ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கும் பிரதமர் மோடி வருகிறார். பிரதமரின் சுற்றுப்பயண நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்வதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 1-ம் தேதிக்குள் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை NDA கூட்டணியில் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News February 18, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


