News April 13, 2025
மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நீதிமன்ற காவல்

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ், மூணாறு ரிசார்டில் வைத்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து, போலீசார் விசாரணை போலீசார் மேற்கொண்டனர். தொடர்ந்து அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். கைதான மத போதகர் ஜான் ஜெபராஜை வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News April 15, 2025
மானாம்பள்ளி மலையேற்றம் நாளை முதல் தொடக்கம்

கோயம்புத்தூரில் நாளை முதல் ‘டிரெக் தமிழ்நாடு’ மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ், மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. முதல்கட்டமாக வால்பாறை, மானாம்பள்ளி வழித்தடம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வனத்துறையின் இணையதளமான https://trektamilnadu.com இல் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News April 15, 2025
கோவை: அரசு ஊரக வளர்ச்சித்துறையில் வேலை

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, கோவையை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய <
News April 15, 2025
கோவை விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு!

சிறுமுகை ஆலாங்கொம்பு அருகே, கடந்த 10 ஆம் தேதி, ஆட்டோ மீது, 4 பேர் சென்ற பைக் மோதிய விபத்தில், நகுலன், நிஜு, விதுன் உள்ளிட்ட மூவர் பலியாகினர். இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வினித் குமார், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.