News December 20, 2024
மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து மனு

தென்காசி கூட்டமைப்பு தலைவர் டிகே பாண்டியன், மாவட்ட துணை தலைவர் அன்பு ராணி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்தையா, கொடிக்குறிச்சி தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சோமன்னாவை சந்தித்தனர். அப்போது, பாரதியார் பெயரில் நெல்லை, தென்காசி வழியாக புது டெல்லிக்கும், தென்காசி -சென்னைக்கு புதிதாக வந்தே பாரத் ரயில் விடவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
Similar News
News October 1, 2025
தென்காசி மக்களே ஆதார் சேவை கட்டணத்தில் மாற்றம்!

தென்காசி மக்களே, 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பிற்கும், இதர பயோமெட்ரிக் புதுப்பிற்கும் 125 ரூபாயும் , டெமோகிராபிக் புதுப்பிப்பிற்கு 75 ரூபாயும் 1.10.25 முதல் 30.9.28 வரை வசூலிக்கப்படும்.அதன் பின் 2031 செப்டம்பர் மாதம் முடிய புதுப்பிற்கு 150 ம், டெமாகிராபிக் புதுப்பிக்க 90 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் இன்று முதல் மாற்றம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷேர்
News October 1, 2025
தென்காசி: திருக்குறள் முற்றோதல் போட்டி விண்ணப்பியுங்க

தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. இதில கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளர்.
News October 1, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.